Thursday, January 15, 2015

என் நண்பர்களுக்கு நன்றி ! - Author : Muralikrishnan


என்னை எழுத தூண்டியதற்கும்! என்னுடைய நினைவலைகளைஎழுப்பி விட்டதற்கும்!.. நான் இங்கு MBBS படிக்கும்பொழுது சந்திக்க நேர்ந்த மூன்றுமறக்கமுடியாத அனுபவங்களை பற்றி எழுத இருக்கின்றேன்என்னுடைய ஆசைஎன்னவென்றால் அனைத்து நண்பர்களும் அவர்களின் அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான்ஐஸ் பக்கெட் challenge போலஇந்த கட்டுரையின் முடிவில்நான் எனக்கு தோன்றிய ஒரு நண்பரை முன் மொழிவேன்அவர் தன்னுடைய அனுபவத்தை/அனுபவங்களை பகிர்ந்து கொள்வார் என்று நம்புகிறேன்அவர் முடித்ததும் அவரால்முன்மொழியப்படுகிற அடுத்த நபர் தன்னுடைய கட்டுரையை எழுதுவார்கட்டுரை நீளமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட மொழியிலோ தான் இருக்க வேண்டும் என்று இல்லை.மறந்து விடாதீர்கள்இங்கு அனுபவிக்க படுவது உங்களின் நினைவுகள்தான்உங்களின்எழுத்து திறமையோ அல்லது மொழித்திறமையோ அல்ல. 
Labour வார்டு
Labour வார்டில் ஒரு அறை இருக்கும்அது Labour வார்டின் நுழைவை தாண்டி சென்றால்வலதுபுறத்தில் அமைந்து இருக்கும்அங்கேதான் அந்த பேஷண்டை பார்த்தேன்அவளுக்குவயது 21 இருக்கும்ஐந்து மாத கர்ப்பம். Mitral Stenosis ஆல் பாதிக்கப்பட்டு மூச்சு விட கூடசிரமப்பட்டு கொண்டு இருந்தால்கூட ஆள் யாருமே இல்லைவிசாரித்தபொழுது அவள்காதல் திருமணம் செய்துகொண்டதால் அவளின் பெற்றவர்கள் மற்றும் இதர சொந்த காரர்கள்கைகழுவி விட்டார்கள் என்பது தெரிந்ததுதிருமணம் செய்து கொண்டவனோ திருமணம்முடிந்து 3-4 மாதத்தில் இவள் கற்பமாக இருக்கின்றாள் என்று தெரிந்தவுடன் காணாமல்போய்விட்டான்இவளின் நிலைமையை பார்த்து அக்கம்பக்கத்தினர் தான் ஹாஸ்பிட்டலில்சேர்த்து விட்டனர்பலமுறை அவள் மூச்சு விட முடியாமல் மயங்கி விடுவாள்ஆக்சிஜென்வைப்பதை தவிர வேறு எந்த மருந்தும் மருத்துவமும் அவளுக்கு கிடைப்பது போல தெரியவில்லை. Medicine department க்கு referral அனுப்பினால் கேஸ் சீட்டை பார்த்த மருத்துவர், Cardiology யில் பார்க்க சொல்லி விட்டார். Cardiologist department  இல் ஆல் யாரும் இல்லை. Anaesthetist  அழைத்தால் எரிந்து விழுந்து கேஸ் சீட்டை தூக்கி அடித்தனர்.சொந்தக்காரர்களும் யாரும் இல்லாமல் மருத்துவ மனையிலும் பார்த்துக்கொள்ள ஆல்இல்லாமல் மிகவும் சிரமமான நிலைமைஆனாலும் அவளுக்கு எப்படியும் நல்லபடியாக வாழவேண்டும் என்ற தீராத எண்ணம்பேச முடிந்த சில சமயங்களில் எப்படி தான் விட்ட படிப்பைதொடரப்போவதாகவும் மற்றவர்களை சார்ந்து இருக்கப்போவதில்லை என்றும் கூறினாள்.எப்படியாவது தன் வாழ்க்கையை சீர் செய்து நன்றாக இருக்க வேண்டும் என்று அவளுள் ஒருவெறி.
OG department  பொறுத்த வரை அவள் பிழைக்க வேண்டும் என்றால் குழந்தை வெளியேவரவேண்டும் அல்லது அவள் இறந்துவிடுவாள்.இதில் ஏதாவது ஒன்றுதான் நடக்கும்.அவளுக்கோ எப்படியும் தன்னையும் தன் குழந்தையையும் யாராவது காப்பாற்றுவார்கள் என்றஒரு நம்பிக்கைஅவளிடத்தில் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை என்னையும்தொற்றிக்கொண்டதுஎப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வந்ததுஅதுதான்எனது CRRI ட்ரைனிங் இல் முதல் வாரம் அதுகிட்டத்தட்ட என் முதல் வாரம் முழுக்க அவளின்அத்தனை மருத்துவ தேவைகளை கூர்ந்து கவனித்து வந்தேன்ஏதோ அவள் என் தங்கைபோல
ஒரு நாள் மதியம் வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றேன்.சாயங்காலம் திரும்ப வந்தால் அவளின் படுக்கை காலியாக இருந்தது. Labour வார்டில்பார்த்தால் அங்கு இல்லைவேறு எங்கு தேடியும் அவள் இல்லைகடைசியாக வார்டுஆயாவிடம் விசாரித்த பொழுது அவள் சொன்னால் ' ஆமா சார்அது செத்துபோச்சிஅங்கபாருங்க அவ கொழந்த இன்னும் உயிரோட இருக்கு'. அப்பொழுதுதான்  பார்த்தேன் கட்டிலுக்குபக்கத்தில் உள்ள ஒரு துணி பொட்டலத்தில் இருந்த சதை பிண்டத்தைகை கால் தலை என்றுவரையறுக்க பட்ட ஒரு உருவம் என்றாலும் எந்த அசைவும் இல்லாமல் மார்க்கூட்டின் துடிப்புமட்டும் இயங்க கிடந்தது அந்த குழந்தை.
முழுமையாக 24 மணிநேரங்களுக்கு மேல் ஆனது அந்த மூச்சு அடங்குவதற்குயாரை நம்பிஅந்த உயிர் இருந்ததோவாழ்வில் பல கஷ்டங்களை அனுபவித்து இருந்தாலும் வாழ்வின் மீதுதீராத ஆசையும் நம்பிக்கையும் வைத்து இருந்த அவளின் நம்பிக்கைக்கு யார் பொறுப்பு.அனைத்தையும் இழந்தாலும் அவள் கடைசிவரை நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.ஆனால் அந்த நம்பிக்கை அவளுக்கு எதையுமே அளிக்கவில்லையேஇதுதான் என் மனதில்எழுந்த கேள்விஅதுவரை கேட்ட கற்றுவைத்த பலவிஷயங்கள் கேள்விக்குஉள்ளாக்கப்பட்டனஎதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதே என்று பலர் சொல்லிகேள்விப்பட்டு இருந்தேன்உயிரையே இழந்த பிறகு அந்த நம்பிக்கை எங்கே இருக்கும்அந்தபெண் செய்த கடைசி செயல் என்ன தெரியுமாதன் இறப்பதற்கு சற்றுமுன் தாலியை பிய்த்துஎறிந்துதான். அதுவரை எந்த நம்பிக்கையில் தாலியை அணிந்து இருந்தாளோ. 

Shed !
நம்மில் அனைவருக்கும் தெரியும் Shed என்று ஒரு வார்டு இருக்கும் என்றுமார்ச்சுவரிக்குஅருகில் இருக்கும்அங்குதான் அந்த patient  பார்த்தேன். Asst Professor வார்டு ரவுண்டில்சொன்னார் 'இந்த ஆளு இங்க வந்து நாலு மாதம் ஆகுது. Below Knee amputationகாக வெய்ட்பண்றான்நீ இங்க போஸ்டிங் முடிக்கறதுக்குள்ள இவனுக்கு surgery பண்ண வைக்கவேண்டியது உன்னோட பொறுப்புஇப்படி சொன்னவுடன் எனக்கு இரண்டு ரெக்கைகள்முளைப்பது போலவும் தலைக்கு மேலே ஒளிவட்டம் தோன்றுவதை போலவும் உணர்ந்தேன்.எப்படியும் அதை நடத்தி முடிப்பது என்று நினைத்து கொண்டேன்அந்த ஆள் சுமாராக 45-50வயது உடையவர்அதிகம் smoke பண்ணியதால் PVD ஆல் gangrene வந்து காலை வெட்டும்நிலைமிகவும் வறுமை. GH இல் எல்லா வார்டிலும் லஞ்சம்தானேஇந்த நபரிடம் காசு எதுவும்இல்லைகாசு கொடுக்க வில்லை என்றால் ஆபரேஷன் நடக்க தேவையான விஷயம்நடக்காது என்று விரைவில் புரிந்து கொண்டேன்அந்த நபர் வார்டில் இருப்பதற்கே தினமும்வெளியில் வந்து GH மெயின் ரோடு ஓரம் பிச்சை எடுத்து MNA மற்றும் வார்டு சம்பந்த பட்டமற்றவர்களுக்கு கொடுக்கும் நிலை
எவ்வளவோ கஷ்டப்பட்டு தேவையான இரத்த பரிசோதனைகள் போன்றவற்றை செய்து 'Patient Fit ' என்று அனுமதி வாங்கியாகிவிட்டதுஆபரேஷன் லிஸ்ட்டில் patient  சேர்த்துவிட்டுஆபரேஷன் நாள் அன்று காத்து இருந்தால் அவர் வர வில்லை. Theatre வொர்க் முடிந்து வார்டுசென்றேன்எனக்கு பயங்கர கோபம்என்னங்க இப்படி பண்ணிட்டீங்கநான் எவ்வளவுகஷ்டப்பட்டு லிஸ்ட்ல உங்க பேர சேர்த்தா நீங்க ஆளே இல்லையாமாஎங்க போயிட்டீங்கஎன்று கேட்டேன்அவர் அழுது கொண்டிருக்கிறார் என்பதை அப்பொழுதுதான் கவனித்தேன். 'மன்னிச்சிங்கோங்க சார்நான் இங்கியே தான் இருக்கேன்என்ன யாரும் கிளீன் பண்ணி வில்சேர்ல கூட்டிட்டு போகமாட்டேன்னுட்டாங்கபணம் எதிர் பார்த்தாங்க போலஆனா எனக்குஅவங்க கேட்ட அளவுக்கு பணம் கொடுக்க முடியலகால் ஆபரேஷன்க்கு முன்னால சுத்தமாஇருக்கணும் அப்படீங்கறதுனால என்னால தவழ்ந்து கூட வர முடியாம போய்டிச்சிஎன்றுகூறினார்எனக்கு மிகவும் சங்கடமாக ஆகிவிட்டதுவிஷயம் புரியாமல் கோப பட்டுவிட்டோமே என்று.
  சரி போகட்டும்அடுத்த முறை இது போல நடக்காது பார்த்துக்கொள்ள வேண்டும் என்றுநினைத்து 15 நாள் கழித்து வந்த லிஸ்ட்டில் அவர் பெயரை சேர்த்தேன்முதல் நாளே வார்டுக்குசென்று அவர் கையில் 100 ரூபாய் தாளை கொடுத்து இத வெச்சிக்கோங்கயாராவது கேட்டாகொடுங்கபத்துலன்ன எப்படியாவது குடுத்துடரன்னு சொல்லி theratre க்கு வர பாருங்கநான்அப்புறம் காசு உங்ககிட்ட குடுக்கறேன்நீங்க அவங்க கிட்ட குடுக்கலாம் என்று சொன்னேன்

  மறுபடியும் வரவில்லைஅதிர்ஷ்டவசமாக முதல் கேஸ் அவர்தான். Asst Surgeon க்கு தெரியும்நான் எவ்வளவு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என்று. 'போய் பார்த்துட்டு வா தம்பிஎன்றுஅனுப்பினார்வார்டுக்கு சென்றால் அவர் அரைகுறையாக சுத்தம் செய்யப்பட்டு பதட்டத்துடன்காத்துகொண்டு இருக்கிறார்என்னை பார்த்தவுடன் 'ஐயோ வாங்க தம்பிஇன்னைக்கும்பண்ண மாட்டாங்க போல இருக்கே என்று அழுதார்.  விசாரித்தால் தான் நடந்தது தெரிந்தது. 100 ருபாய் தாளை பார்த்தால் அனைத்தையும் பறித்து கொள்ளுவார்கள் என்று நினைத்துபக்கத்து பெட்டில் இருந்தவனிடம் சில்லறை மாற்றி வர அனுப்பி உள்ளார்அவன் அந்தபணத்தை தூக்கி கொண்டு ஓடி விட்டான்இப்பொழுது என்ன செய்ய. OT க்கு கொண்டுபோனால் எப்படியும் surgery நடந்து விடும்வீல் சேர் தள்ள யாரும் இல்லைகூப்பிட்டாலும் வரமாட்டேன் என்கிறார்கள்இன்னொரு patient கூட இருந்த அட்டண்டரை அழைத்தேன்அந்தநபர் வீல் சேரின் கால் பாகத்தை உயர்த்தி பிடித்து கொண்டார் (வீல் சேரில் ஏதோ கோளாறு).நான் கைப்பிடியை பிடித்து தள்ள அந்த ஆள் கால் பாகத்தை பிடித்து கொண்டே வந்தார்
ஒரு வழியாக OT  வந்து சேர்ந்தால் Anaesthetist கண்ணா பின்னாவென்று திட்டுகிறார். OT  யேcontaminate ஆகிவிட்டது என்றுஒரு வழியாக சமாளித்து அறுவை சிகிச்சை முடிந்ததுஅடுத்தநாள் வார்டில் போய் பார்த்தால் அவர் இல்லைவார்டு Nurse சொன்னார். 'பாவி பயலுங்க அந்தஆளை பயமுறுத்தியே தொரத்தி விட்டுட்டாங்க'. MNA  கும்பல் ஒன்று அந்த நபருக்குஆபரேஷன் நடந்ததில் மிகவும் கோபம் அடைந்து அவரை மிரட்டி வெளியே கொண்டு போய்விட்டு விட்டு வந்து விட்டனர்அடுத்த நாள்!  என்னுடன் சேர்த்து வீல் சேர் கால் பக்கம் பிடித்துதள்ளிய நபர் சொன்னார் 'சார் நாம வண்டில வெச்சு கொண்டு போன ஆளு பாலத்துக்கு அடியிலசெத்து போய் கிடக்கிறாரு'. பாவிகள் வெளியில் கொண்டு போய் தள்ளி மொத்தமாக மேலேயேஅனுப்பி விட்டார்கள்.
இதில் எங்கு தவறு நடந்ததுசிகரெட் குடித்தது தப்புதான்பணமில்லாமல் இருந்தது அந்தஆளின் தப்பாதன்னால் முடிந்தவற்றை பிச்சை எடுத்தாவது கொடுத்தாரேஅப்படியும்அவர்கள் மனம் இறங்க வில்லையாஆபரேஷன் முடிந்து ஒரு நாள் ஆவதற்குள் வெளியேதூக்கி எறிந்து விட்டார்களே. அந்த நபர் இறந்துவிடுவார் என்று அவரை வெளியே துரத்தியவர்கள் நினைத்து இருக்க மாட்டார்கள் என்றாலும் அவர்களின் செயலை எவ்விதம் நியாய படுத்துவார்கள்.
CRRI Attendance
இப்பொழுது ஒரு மாறுதலுக்கு ஒரு நகைச்சுவையான நிகழ்ச்சியை பார்ப்போம். நம்முடைய CRRI பயிற்சி காலத்தில் ஒரு டீன் இருந்தார். அவர் அவ்வப்பொழுது நாம் சரியான நேரத்தில் வருகிறோமா என்று ஸ்பாட்செக் பண்ணுவார். சரியாக ஒன்பது மணிக்கு RMO ரூமுக்கு வந்து attendance register ஐ எடுத்து சென்று விடுவார். மிகவும் கோபமாக இருந்தால் நம்  அனைவரையும் அவர் அறைக்கு அழைத்து திட்டுவார். அது அவர் கடமை. அதை நாம் குறை சொல்ல கூடாது. 
அப்படிதான் ஒரு நாள் அனைவரையும் அவர் அறைக்கு அழைத்தார். சரி வழக்கம் போல இன்றும் பொதுவாக அவர் அனைவருக்கும் வழங்கும் திட்டை நாமும் பகிர்ந்து நம்முடைய கடமையை ஆற்றுவோம் என்று மற்றவர்களுடன் சென்றேன். அவரும் ஆரம்பித்தார் வழக்கம் போல. 'நீங்க எல்லாம் என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டேங்கறீங்க! இந்த register ல வெறும் கொஞ்சம் பேர் தான் சரியான நேரத்துக்கு கையெழுத்து போட்டு இருக்கீங்க. கிட்டத்தட்ட முக்கால் வாசி பேர் சரியான நேரத்துக்கு வரல. நீங்க இனிமே சரியா வரலன்ன அன்னைக்கு உங்களுக்கு ஆப்சென்ட் தான்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன்....' அப்படி இப்படின்னு வழக்கத்த விட ரொம்ப கோபமா திட்டிட்டு இருந்தார். சரி பொதுவா சொல்றார்னு நானும் யதார்த்தமா நின்னுட்டு இருந்தேன்.

'உங்களுக்கு எல்லாம் ஏன் திருட்டு தனம்னே தெரியல. நீங்கள்லாம் பின்னால எப்படி பொறுப்போட இருக்க போறீங்க. Proxy கையெழுத்து போடறீங்க. ஒவ்வொருத்தரோட கையெழுத்தும் ஒவ்வொரு நாளும் வேற மாதிரி இருக்கு. நீங்க கையெழுத்து போடாம உங்க friend அ போட சொன்னீங்கன்னா நீங்க மட்டும் இல்ல உங்க friendஉம் சேர்ந்து மாட்டுவான். இதை சொல்லிவிட்டு சற்று நேரம் அமைதியை இருந்தார். இதெல்லாம் பரவாயில்லப்பா ( சற்று குரல் கம்ம) ஆனா ஒருத்தன், அவன் பேரு என்ன, ஆங் ... இங்க இருக்கு.... முரளி கிருஷ்ணன் .... இவன் என்ன பண்ணி இருக்கான்னா.... திருட்டு கையெழுத்து இன்னைய தேதிக்கு போட்டது இல்லாம நாளைக்கும் சேர்த்து போட்டு இருக்கான். அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்..... 
அதுக்கும் அப்புறம் எனக்கும் எதுவும் கேக்கல. ஒரே கொயிங்க்க்க்க்க் சத்தம்தான். அவர் கிட்ட எப்படி சொல்லுவேன். எனக்கு கண்ணு சுமாராதான் தெரியும். அதுவும் குறிப்பா அன்னைக்கு காண்டாக்ட் லென்ஸ் போட முடியாமல்  கண்ணாடி போட்டுட்டு வந்து இருந்தேன். கண்ணாடி போட்டா எனக்கு எருமையே முன்னால நின்னா கூடாது. அப்படி இருக்கும் பொழுது அத்துனூண்டு கட்டத்துக்குள்ள நேத்து கட்டம் எது இன்னைக்கு கட்டம் எதுன்னு எப்படி என்னால் பிரித்து அறிய முடியும். இதை எப்படி அவர் கிட்ட நான் சொல்ல முடியும்…….
இதோடு நிறுத்தி கொள்கிறேன். 

இப்பொழுது முன்மொழியும் நேரம். நான் கதிரவனை அவனுடைய நினைவுகளை பகிர்ந்துகொள்ள அழைக்கின்றேன்.

No comments:

Post a Comment